படத்தின் இசை வெளீயிட்டு தாமதன் ஏன் என்பதை இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா தனது டிவிட்டர் இணையத்தில் தெரிவித்துள்ளார்.
" மங்காத்தா படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் அமைந்த இசை எனக்கு திருப்திகரமாக இல்லை. ஆகையால் அப்பாடலுக்கு திரும்பவும் இசையமைத்து தயார் செய்தேன் . அந்த இசை எனக்கு திருப்திகரமாக அமைந்து இருக்கிறது. புதிய டியூன் இசையமைத்து பாடல் பதிவு இப்போது முடிந்துவிட்டது. அதனால் தான் இப்படத்தின் இசை வெளீயிடு தாமதமாகியது " என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு இயக்குனர் வெங்கட்பிரபு தனது டிவிட்டர் இணையத்தில் " படத்தின் இசை சி.டியில் மொத்தம் 8 பாடல்கள் இருக்கும். படத்தின் PROMO பாடல் தற்போது இடம் பெற வில்லை.
மங்காத்தா படத்தின் MASTER CD சோனி கம்பெனியிடம் நாளை போய் சேர்ந்து விடும். ஆகையால் கூடிய விரைவில் இசை வெளியீடு இருக்கும் " என்று தெரிவித்துள்ளார்.
இசை வெளியீட்டை இனியும் தாமதிக்காமல், இன்னும் ஒரிரு வாரங்களில் இசை வெளீயிடு நடைபெறலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment