விஜய் - கெளதம் : ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை அடுத்து கெளதம் இயக்கத்தில் நடிக்க இருக்கிறாராம் விஜய். அஜீத் நடிக்க மறுத்த 'துப்பறியும் ஆனந்த்' என்ற கதையை விஜய்க்கு ஏற்றார் போல் சிறு மாற்றம் செய்து இயக்க இருக்கிறாராம். இப்படத்தை தனது PHOTON KATHAAS நிறுவனம் மூலம் தயாரிக்க இருக்கிறார்.
சரத்குமார் - பாலா : எப்போதும் தனது அடுத்தடுத்த படங்களிற்கு இடையில் நீண்ட இடைவெளி கொடுப்பார் பாலா. 'அவன் இவன்' படத்திற்குப் பிறகு தனது அடுத்த பட வேலைகளில் இறங்கி விட்டாராம். அதில் முக்கியமான பாத்திரத்திற்காக சரத்குமாரை சந்தித்து பேசி இருக்கிறாராம். இப்படத்தின் நாயகனாக புதுமுகம் ஒருவர் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆர்யா - செல்வராகவன் : செல்வராகவன் தற்போது இயக்கி வரும் 'இரண்டாம் உலகம்' படத்தை அடுத்து, தெலுங்கில் அல்லு அர்ஜுன் அல்லது தமிழில் ஆர்யா நடிக்க இருக்கும் படத்தை இயக்குவார் என்றும் தகவல்கள் கிடைத்தன. ஆனால், ஆர்யா- செல்வா கூட்டணி தான் முதலில் அமையும் என்றும் இருவரும் அடிக்கடி சந்தித்து கதை விவாதத்தில் ஈடுபட்டு வருவதாகவும் கோடம்பாக்கத்தில் கூறுகிறார்கள். தனக்கு நெற்றியில் அடிபட்டு இருந்தாலும் ஆர்யா ஹைதராபாத்தில் இருந்து வந்து செல்வராகவன் திருமண வரவேற்பில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜீத் - விஜய் : அஜீத் பில்லா-2 படத்தை அடுத்து 'மதராசபட்டிணம்' விஜய் இயக்கத்தில் தான் நடிப்பார் என்று தெரிகிறது. இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசி வருவதாகவும் 'தெய்வத்திருமகள்' கிடைத்த வரவேற்பை அடுத்து அஜீத் - விஜய் இணைவது உறுதி என்றும் கூறுகிறார்கள் இயக்குனர் விஜய்க்கு நெருக்கமானவர்கள்.

No comments:
Post a Comment